மே 7 ஆம் தேதி தொடங்கிய இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நேற்று திடீரென நிறுத்தப்பட்ட பிறகு, பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, பாகிஸ்தானும், இந்திய இராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது. ஆனால், இந்தியாவின் வலுவான பாதுகாப்புப் படை பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.

இதற்கிடையில், நேற்று மாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கான பெருமையைப் பெற்று அமெரிக்கா தம்பட்டம் அடித்துக் கொண்டது.
ஆனால் அதற்கு முன்புவரை, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பற்றி அமெரிக்கா நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என தெளிவாகக் கூறி வந்தது. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பற்றிய உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், நேற்று இரவு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இரு நாடுகளும் நேரடியாகப் பேசவில்லை.பேச்சு இல்லாததால், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட வாய்ப்பு இருந்தது'' என அமெரிக்கா கூறியது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இதுபோதாது.. மேப்பில் இருந்தே அழியுங்கள்... 'சிந்தூரை' இழந்த பெண்கள் ஆவேசம்..!
நேற்று, இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடக்கக்கூடும் என்ற தகவல் உளவுத்துறைக்கு கிடைத்ததாக அமெரிக்கா கூறுகிறது. துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு பாகிஸ்தானுக்கு பெரும் அடி கொடுக்கத் தயாராக இருந்ததை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி, பதற்றத்தைக் குறைத்து போர் நிறுத்தத்தை நோக்கி நகருமாறு இரு நாடுகளையும் சமாதானப்படுத்தியதாக வான்ஸ் கூறினார்.

நேற்ரு உளவுத்துறை, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போரை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான நிலையத்தை இந்திய ட்ரோன்கள் தாக்கி அழிக்கத் திட்டமிட்டு இருந்தது. இந்த இராணுவத் தளம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முக்கிய திட்டப் பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரித்த பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டளை அதிகாரத்தை குறிவைப்பதற்கான எச்சரிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு இருந்தது'' என்று முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் மோடியிடம் வான்ஸ் பேசினார். பாகிஸ்தானுடன் நேரடியாகப் பேச இந்தியாவை வற்புறுத்தினார். அவர் "பதட்டங்களைக் குறைப்பதற்கான வழியை முன் வைத்தார்.பாகிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்ததாக அமெரிக்காவே தனிச்சையா கூறினார். வான்ஸ் தலைமையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளினுடனும் இரவோடு இரவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். போர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் டிரம்ப் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது.

நேற்று, இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையான உடனடி போர் நிறுத்தத்தை அறிவித்தன. டொனால்ட் டிரம்ப் தனது மத்தியஸ்தத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்று தனக்குத்தானே பெருமை கொண்டாடத் தொடங்கினார். ஆனாலும் , இந்தியா இதை நேரடியாக இல்லாவிட்டாலும் நிராகரித்தது. இந்தியாவின் நிலைப்படி, இது இரு நாடுகளுக்கும் இடையிலான 'நேரடி ஒப்பந்தம்'. அதே நேரத்தில், போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிப்பதில் பாகிஸ்தான் பிரதமர் ஆர்வம் காட்டியது. ஆனால், போர் நிறுத்தத்திற்குப் பிறகும், பாகிஸ்தான் மீண்டும் தனது தீய செயலைக் காட்டியது. போர் நிறுத்தத்திற்கு 3 மணி நேரத்திற்குப் பிறகு, காஷ்மீரில், குறிப்பாக வைஷ்ணோ தேவி மீது ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு முழு ஆதரவு... உறுதி அளித்த கத்தார் அமீர்... சிக்கலில் பாகிஸ்தான்..!