இரு நாடுகளுக்கும் இடையே நடந்த நேரடி பேச்சு வார்த்தையால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலையிட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அதனை இந்தியா மறுத்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே நேரடியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சண்டை நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் முதலில் அறிவித்திருந்த நிலையில், இந்தியா இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.