உக்ரைன் – ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரிய முயற்சி எடுத்து வருகிறார். அவர் ஒரு அமைதி ஒப்பந்தம் கொண்டு வந்துள்ளார். அதில் உக்ரைனிடம் இருக்கும் சில பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, ரஷ்யா ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள கிழக்கு உக்ரைன் பகுதிகளை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்று டிரம்ப் சலுகை கேட்கிறார்.
ஆனால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இதை ஒப்புக்கொள்ளவே இல்லை. அவர் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் பதில் சொல்லியுள்ளார்: “ரஷ்யாவுக்கு நிலம் ஒரு இஞ்ச் கூட விடமாட்டோம். நாங்கள் போராடுவதே நம் நாட்டை முழுமையாகக் காப்பாற்றத்தான்.
எங்கள் நாட்டுச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், உலகச் சட்டம் எல்லாம் நிலத்தை விட்டுக்கொடுக்க அனுமதிக்காது. மக்களுக்கு முன்பாகவும் அது தவறு. அதனால் எந்தச் சலுகையும் செய்ய மாட்டோம்.”
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா அமைதி திட்டம்!! ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!! ஜெலன்ஸ்கி ஆதரவு!!

ஜெலன்ஸ்கி இந்தப் பதிலை லண்டனில் பிரிட்டன் பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மன் சான்சலர் ஆகியோரைச் சந்தித்தபோது சொன்னார். அவர்கள் மூவரும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
டிரம்ப் கொஞ்சம் கோபமாக இருக்கிறார். “ஜெலன்ஸ்கி இன்னும் என் அமைதித் திட்டத்தைப் படிக்கவில்லை. அவரது உதவியாளர்கள் ஓகே சொல்கிறார்கள், ஆனால் அவர் தயாராக இல்லை” என்று கூறினார். ஆனால் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களுக்காக உறுதியாக நிற்கிறார். “நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுகிறோம்” என்று சொல்கிறார்.
இப்போது உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. டிரம்பின் அழுத்தத்தை ஜெலன்ஸ்கி தாங்குவாரா? போர் எப்போது முடியும்? ரஷ்யா நிலம் வாங்காமல் விடுமா? அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா அமைதி திட்டம்!! ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!! ஜெலன்ஸ்கி ஆதரவு!!