ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்ற சுற்றுலா பயணியரில், ஆண்களை மட்டும் குறி வைத்து 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இரு நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததால், பாகிஸ்தான் பதற்றம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது பாகிஸ்தானை நடுங்க செய்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் வான் வெளி பாதுகாப்பை உடைத்து இந்தியா பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி.. விடிய விடிய பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.!

இதனால் எல்லையோர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளை வேரறுக்க நம் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானை பதற்றத்தில் தள்ளி உள்ளது. இதற்கிடையே, இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா கொடுத்த பதிலடியை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் நேற்று இரவு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இவை அனைத்தையும் இந்தியா இடைமறித்து அழித்து விட்டது.

போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி ஒரே நேரத்தில் அட்டாக் செய்தது. ஆனால் எல்லா குண்டுகளையும் இந்தியா கச்சிதமாக இடைமறித்து அழித்தது. பாகிஸ்தான் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்புர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய், புஜ் ஆகிய நமது நகரங்களை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அதிலும் குறிப்பாக 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது. இந்த டிரோன்களை அழிக்க ராணுவம் பல வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. L-70 துப்பாக்கி, Zu-23mm, சில்கா சிஸ்டம் உள்ளிட்ட வான் பாதுகாப்பு கவசங்கள் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அனைத்து ட்ரோன்களையும் வானிலேயே பஸ்பமாக்கியதாகவும் இந்திய ராணுவம் பெருமைபட தெரிவித்துள்ளது. தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க: SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!