காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்ற போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்ற 8ம் தேதி இரவு எல்லையில் காத்திருந்த 40 - 50 பயங்கரவாதிகள் நமது எல்லையை நோக்கி வந்தனர். சூழ்நிலையை கண்டறிந்த நமது பாதுகாப்பு படை வீரர்கள், அவர்கள் மீது கடுமையான குண்டுகளை வீசி உள்ளனர். எதிர்பார்த்தது போலவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்களுக்கு நமது வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இது அனைத்தும் 1.5 மணி நேரத்தில் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: நாங்க தண்ணீ தர்றோம்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக வரிந்துகட்டும் சீனா! இந்தியாவை எதிர்க்க ஒன்றுகூடும் பங்காளிகள்..!