இந்தியாவின் நான்கு மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியதால் இந்தியா விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு பீரங்கி மூலமாக தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்.

இந்த நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆர்.எஸ்.புராவில் நடந்த தாக்குதலில் 8 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் 7வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்வாரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 8 வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உதிரக் கொடை உயிர்க் கொடை...ராணுவ வீரர்களுக்கு உதவ வாருங்கள்...சண்டிகர் நிர்வாகம் அழைப்பு!

இதையும் படிங்க: பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!