2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடிகையை வழிமறித்து கேரவனுக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். இந்த சம்பவம் கேரளாவின் மலையாள சினிமா உலகை மட்டுமல்லாமல், முழு இந்தியாவையும் நடுங்கடித்த ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. ஒரு பிரபலமான தென்னிந்திய நடிகை, திரிசூரிலிருந்து கொச்சியின் பக்கம் பயணித்துக்கொண்டிருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
கேரவனில் நடிகை சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை வழிமறித்து அத்துமீறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். நடிகர் திலீப் உள்ளிட்ட எட்டு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

நடிகையின் மீது இருந்த முன் பகையின் காரணமாக நடிகர் திலீப் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் திலீப்பை விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆறு நபர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப்பை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் திலீப்பின் பங்கு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திலீப்பின் பங்கு குறித்து போதி ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டோரில் A1 முதல் A6 வரை ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் ஆண், பெண் உறவு... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பு...!