• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு! நடிகை லட்சுமிமேனன் நண்பர்களை காவலில் எடுக்க திட்டம்..!

    ஐடி ஊழியரை கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
    Author By Nila Thu, 28 Aug 2025 09:35:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-lakshmi-menon-friends

    நடிகை லட்சுமி மேனன், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். 2011ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ரகுவிண்டெ சுவந்தம் ரசியா மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி, கொம்பன், றெக்க உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். இருப்பினும், சமீப காலமாக அவர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது, யோகி பாபுவுடன் மலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இதனிடையே, கேரளாவின் கொச்சியில் உள்ள பானர்ஜி சாலையில் அமைந்துள்ள வெலாசிட்டி என்ற சொகுசு மதுபான விடுதிக்கு லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்கு, அவரது நண்பர்களுக்கும், மற்றொரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பெரும் தகராறாக மாறியது. மேலும் இரு தரப்பினரும் பாரை விட்டு வெளியேறினர். 

    actress lakshmi menon

    ஆனால், பிரச்சினை அங்கு முடிவடையவில்லை. வெளியே சென்ற பிறகு, லட்சுமி மேனனின் நண்பர்கள், ஆலுவாவைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்ற ஐடி ஊழியரை காரில் கடத்தியதாகவும், அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. அலியார் ஷா சலீம் தனது புகாரில், தன்னை கடத்திய காரில் லட்சுமி மேனன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் இருந்ததாக குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மிதுன், அனீஷ் மற்றும் சோனாமோல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. 

    இதையும் படிங்க: முதல்வர் நாற்காலியில் விஜய்... தவெகவினரின் விநாயகர் சிலை வைரல்

    வீடியோவில், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரை வழிமறித்து, அதில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் ஐடி ஊழியரை கடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் லட்சுமி மேனனின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டது. காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைக்க முயன்றபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

    அவரது தரப்பில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும், இந்த புகார் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அளிக்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 17, 2025 வரை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. 

    இதையும் படிங்க: இதுதாங்க நம்ப தமிழ்நாடு... விநாயகர் ஊர்வலத்தில் கூட்டம், கூட்டமாக பங்கேற்ற இஸ்லாமியர்கள்...!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share