நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. அதற்கு முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. தங்களது பகுதியில் வைக்கப்படவுள்ள விநாயகர் சிலைகளை பிரம்மாண்ட அலங்காரத்துடன் டிராக்டர், டாடா ஏசி போன்ற வாகனங்களில் வைத்துக்கொண்டு, மேள தாளங்கள் முழக்க ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நகரில் உள்ள நவசக்திவிநாயகர் கோவிலில் 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா காலை கொண்டாடப்பட்டு இன்று மாலை நவசக்திவிநாயகர் உற்சவர் சிலை மற்றும் முளைப்பாரி நகர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு முன்பாக முளைப்பாரி முன்பு பெண்கள் கும்மி அடித்து ஊர்வலத்தை தொடங்கினர். முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம் மற்றும் மேளதாளங்களுடன் அபிராமம் நகர் முழுவதும் வலம் வந்தது/
இதையும் படிங்க: தூள் கிளப்பிய திமுக அமைச்சரின் வாரிசு... கொண்டாட்டத்தில் உடன் பிறப்புகள்...!
இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்கமாக அபிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கலந்து கொண்ட இஸ்லாமிய மக்களுக்கு நவசக்திவிநாயகர் கோவில் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்.. அடிக்கல் நாட்டினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்..!!