ஆதார் என்பது இந்தியாவில் வழங்கப்படும் ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணாகும். இது உலகிலேயே மிகப் பெரிய biometric அடையாளத் திட்டமாகக் கருதப்படுகிறது. இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எனும் அமைப்பால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆதாரின் முக்கிய நோக்கமே, இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தவறுதலாகாத, உறுதிப்படுத்தக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும்.
ஆதார் எண் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. அது ஒவ்வொரு நபரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், பத்து விரல் ரேகைகள், இரு கருவிழி ஸ்கேன் போன்ற உயிரி தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் மத்திய தரவுத்தளத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. ஒருவர் ஆதார் எண்ணைப் பெற, அருகில் உள்ள ஆதார் மையத்தில் சென்று, தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு இலவசம். பதிவுக்குப் பிறகு சில நாட்களில் ஆதார் அட்டை தபாலில் வந்து சேரும் அல்லது e-Aadhaar ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதார் எண்ணின் மிக முக்கியமான அம்சம். அது வாழ்நாள் முழுவதும் மாறாது என்பதும், எந்த நபருக்கும் மீண்டும் அதே எண் வழங்கப்படாது என்பதுமாகும். ஒருவர் இறந்த பிறகும் அந்த எண் மீண்டும் யாருக்கும் ஒதுக்கப்படுவதில்லை. இது போலி அடையாளங்கள், பல அடையாள அட்டைகள் வைத்திருப்பது போன்ற மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. தற்போது ஆதார் பல அரசு சேவைகளுக்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மொபைல் சிம் வாங்குவதற்கும், வருமான வரி செலுத்துவதற்கும் (PAN உடன் இணைப்பு), LPG மானியம் பெறுவதற்கும், பல திட்டங்களில் பயனாளியாகப் பதிவு செய்வதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!
இந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் இரண்டு கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மோசடிகளை தடுக்கும் நோக்கில் உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 142 கோடிக்கு அதிகமான மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நலத்திட்டங்களை மோசடியாக பெறுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆதார் தரவுகளை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோவை தொடர்ந்து விமான துறையிலும் பாகுபாடு... MP சு. வெங்கடேசன் கண்டனம்..!