முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள். எடப்பாடியார் ஆலோசனைகிணங்க தமிழகம் முழுவதும் நினைவு நாள் நிகழ்ச்சி அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால் நிறைய செய்திகளை சொல்ல முடியவில்லை. அதற்குமேல் சொல்வது நியாயமாகாது. முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மதுரை பற்றிய அக்கறை காட்டாத முதல்வர் இப்போது மதுரை மக்களுக்கு தேவை வளர்ச்சியா, அல்லது இடைவேளை விட்டு வளர்ச்சியா என்று கேட்டிருக்கிறார். அவர் யாரையோ தாக்கவராக நினைத்துக் கொண்டு தன்னைத்தானே தாக்கிக் கொண்டிருக்கும் நிலையை எங்களால் பார்க்க முடிகிறது. 1672 நாட்கள் ஆகிவிட்டது ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க 90 நாட்கள் கூட இல்லை. மதுரையின் வளர்ச்சியை கவலப்படாத முதல்வர் இன்று மதுரையின் வளர்ச்சியை கவலைப்படுவது போல டேஷ் போட்டு பேசியிருக்கிறார். எதை குறிப்பிட்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
மதுரை மக்கள் வளர்ச்சிக்கு இதுவரை தமிழக அரசு எந்த திட்டங்களையும் முழுமையாக முடிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இரும்புக்கு குழாய் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் கொண்டு வரத் திட்டமிட்டு செயலாற்றப்பட்டது. நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆமை வேகத்தில் நடைபெற்று முடிப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி காலம் முடியப்போகிறது என்பதற்காக எல்லாவற்றிற்கும் விழா எடுக்கிறாரே தவிர, பணியினை செய்யவில்லை. லோயர் கேம்ப் குடிநீர் திட்டத்தின் முடிதீர்களா, பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமையாக தொடங்கவும் இல்லை. மழை வெள்ள பாதிப்பிற்கு எதுவும் நிதி கொடுத்தீர்களா.
இதையும் படிங்க: “எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!
திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் மற்றும் விளையாட்டு அரங்கம் கேட்கப்பட்டது என்ன ஆனது. மதுரைக்கு எதுவும் அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்சாலை கொண்டுவரப்பட்டதா? எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மருத்துவமனைக்கு உற்ற துணையாக இல்லை. மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்து மூன்று மாதம் போகிறது. திமுக தலைமை மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் மதுரை மாநகராட்சியை எப்படி கொண்டு செல்லும்.
பொதுக்குழு நடத்துகிறார்கள், உரிமை தொகையை கொடுப்பதாக சொல்லுகிறார்கள், மகளிர் உரிமைத்தொகை 28 லட்சம் மகளிருக்க கொடுக்க இருக்கின்ற அரசு இந்த 50 மாச நிலுவைத் தொகையை கொடுக்குமா. இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. பட்டா கொடுப்பதாக சொல்லி கொடுத்த பட்டாவையே மீண்டும் கொடுக்கிறார்கள். ஸ்டாலின் நாளை மறுநாள் மதுரை வந்து பட்டா கொடுப்பதாக சொல்கிறார்கள். ஒரே தொகுதியில் ஒருவர் மட்டும் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு செய்கிறார். மதுரை வளர்ச்சி குறித்து கேள்வி கேட்க தகுதி இல்லாத முதலமைச்சர்.
திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனைத்து சமுதாயமும் ஒன்றாக இருந்தது. நீதிமன்றம் உத்தரவு கொடுத்திருக்கிறது அதை நிறைவேற்ற மக்கள் யாரும் தடுக்கவில்லை. திமுக அரசு காவல்துறையை வைத்து தடுத்திருக்கிறது. திமுக அரசு வேண்டுமென்றே மக்களை பிரித்த ஆளுகின்ற முயற்சியில் தோல்வி அடையப் போகிறார்கள். தீபத்தை ஏற்ற எந்த தடுப்போ அறிக்கையோ சொல்லவில்லை. இங்கு இருக்கும் மத ஒற்றுமை மிக அற்புதமானது. அதைக் கெடுப்பதற்காக திமுக அரசு வஜ்ரா வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி, 1000 காவல்துறையினரை அழைத்து வந்து பேரிகேடுகளை இட்டு தடுக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளை தடுக்க நினைக்கிறது.
திமுக அரசு அவர்களுக்கு கடுமையான கண்டனம். உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள். மதுரையில் ஆக்கிரமிப்பு மற்றும் வீடுகளை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது என்று சொல்கிறார்கள். இந்த நீதிமன்றத்தை மட்டும் அவர்கள் ஒப்புக் கொள்ளாததற்கு காரணம் என்ன. மதத்தை பிரித்து ஆளுகின்ற முயற்சியை திமுக அரசு தான் மதத்தை வைத்து மக்களை பிரித்து ஆளுகின்ற அரசியல் செய்கிறது. திமுகவின் பிரித்து ஆளுகின்ற முயற்சி வெற்றி பெறாது.
மக்களின் எண்ணங்கள் உணர்வுகள் எந்த மதமாக இருந்தாலும் சரி அதை யாரும் தடுக்கவும் கெடுக்கவும் முடியாது அதை கெடுக்க நினைக்கின்ற அமைச்சர்களுக்கு எங்கள் எடப்பாடியார் சரியான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். நாங்களும் ஜெயலலிதா நினைவு நாளில் உறுதிமொழி எடுத்திருக்கிறோம் 2026 இல் அதிமுக ஆட்சிக்கு வரும், தமிழகம் விழிப்புடன் இருக்கும், ஒளியேற்றுகின்ற நாள் 2026 அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமையில் புதிய ஆட்சி சட்ட ஒழுங்கை காக்கின்ற ஆட்சி வரும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: “கோவத்தில் இப்படி முடிவெடுத்திருக்கக்கூடாது” - தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வி.கே.சசிகலா அட்வைஸ்...!