நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3- ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங்கிலும் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

இதனை தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டு வருகிறார். இந்த பந்தயத்தின் போது ரேஸ் டிராக்கில் சென்று கொண்டிருந்த அஜித்குமார் காரின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது.
இதையும் படிங்க: பத்மபூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்..! ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவிப்பு..!

டயர் வெடித்து புகை எழுந்த கிளம்பிய நிலையில், நடிகர் அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி உயிர் தப்பினார். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் பந்தய டிராக்கில் இருந்து அவரது கார் அப்புறப்படுத்தப்பட்டது. காரின் டயர் சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் அவர் ரேசில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கார் ரேசிங்கின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. தற்போதைய நிலைமை..?