குஜராத் பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) இந்தியாவுக்கு எதிரா பயங்கரவாத செயல்பாடுகளை தூண்டி வந்த ஒரு பெரிய சதியை கண்டுபிடிச்சு, அதன் பின்னணியில் இருந்த ஷாமா பர்வீன் அன்சாரி என்ற 30 வயது பெண்ணை கைது செஞ்சிருக்கு.
ஜார்க்கண்டைச் சேர்ந்த இவர், பெங்களூருல வசிச்சு வந்தவரு. கடந்த ஜூலை 31-ம் தேதி இவரை கைது செஞ்ச ஏடிஎஸ், இவரோட மொபைல், லேப்டாப் எல்லாத்தையும் பறிமுதல் செஞ்சு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வச்சிருக்கு. இதுல இருந்து வெளியாகி இருக்குற தகவல்கள் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கு.
ஷாமா பர்வீன், அல்-குவைதாவோட இந்திய துணை அமைப்பான AQIS-க்கு ஆதரவா சமூக வலைதளங்களில் பயங்கரவாத கருத்துகளை பரப்பி வந்திருக்கார். இவர் இரண்டு ஃபேஸ்புக் பக்கங்களையும், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கையும் நடத்தி, சுமார் 10,000 பேரை ஃபாலோயர்ஸா வச்சிருந்தார்.
இதையும் படிங்க: காசாவை ஜெயிச்சாலும் இஸ்ரேல் கூட சேர்க்க மாட்டோம்!! நெதன்யாகு புதுரூட்..! மாஸ்டர் ப்ளான்..
இந்த பிளாட்ஃபார்ம்களை வச்சு, இந்தியாவுக்கு எதிரான வன்முறை கருத்துகளையும், அல்-குவைதாவோட தலைவர்கள் பேசுற வீடியோக்களையும் பகிர்ந்திருக்கார். இதுல ஒரு பயங்கரமான விஷயம் என்னன்னா, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பதற்றம் நிலவின நேரத்துல, இவர் இந்தியாவோட ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டிருக்கார்.

குறிப்பா, இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரா நடத்தின ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிருக்கு ஒரு திறந்த அழைப்பு விடுத்திருக்கார். அந்த பதிவுல, “இப்போ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! இஸ்லாமை செயல்படுத்த ‘கிலாஃபத் திட்ட’த்தை ஏத்துக்கோங்க. முஸ்லிம் நிலங்களை ஒண்ணு சேர்த்து, ஹிந்துத்துவாவையும், சியோனிசத்தையும் ஒழிச்சுடுங்க!” இப்படி ஆத்திரமூட்டுற விதமா பதிவு போட்டிருக்கார். இது இந்தியாவுக்கு எதிரான போரை தூண்டுற முயற்சியா பார்க்கப்படுது.
இதோட நிற்காம, இவர் பகிர்ந்த மற்றொரு வீடியோவுல, அல்-குவைதா தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராகவும், ஹிந்து சமூகத்தை இழிவு படுத்துற விதமா பேசியிருக்கார். இந்த வீடியோக்கள் மூலமா இளைஞர்களை தீவிரவாதமயமாக்க முயற்சி செஞ்சதும் விசாரணையில தெரியவந்திருக்கு.
இதுக்கு முன்னாடி ஜூலை 22-ம் தேதி, அல்-குவைதாவுடன் தொடர்பு இருந்த நாலு பேரை ஏடிஎஸ் கைது செஞ்சு விசாரிச்சப்போ, இவங்களோட பின்னணியில ஷாமா இருக்குறது தெரியவந்து, இவரை கைது செஞ்சாங்க.
இப்போ ஷாமாவுக்கு எதிரா UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செஞ்சு, அவரோட பாகிஸ்தான் தொடர்புகள், அல்-குவைதாவுடனான இணைப்பு பத்தி ஆழமா விசாரணை நடந்து வருது. இந்த விவகாரம் இந்தியாவுக்கு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலா பார்க்கப்படுது. இந்தியாவோட உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துறதுக்கு இந்த கைது ஒரு முக்கியமான படியா இருக்கு.
ஆனா, இந்த சமூக வலைதள பயங்கரவாதம் இன்னும் எவ்வளவு ஆழமா இருக்குன்னு தெரியல. இந்த விசாரணை இன்னும் என்னென்ன திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும்னு பாக்க வேண்டி இருக்கு!!
இதையும் படிங்க: மோடி போட்ட போடு.. ஆடிப்போன ட்ரம்ப்.. இறங்கி வந்து பேசும் அமெரிக்கா..