மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் மிக நீண்ட காலம் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருக்கார்.
2019 மே 30-ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித் ஷா, இதுவரை 2,258 நாட்கள் பதவியில் இருந்து, அத்வானியின் 2,256 நாட்கள் (1998-2004) சாதனையை தகர்த்திருக்கார். இந்த மைல்கல், 2019 ஆகஸ்ட் 5-ல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆறு வருஷ நிறைவு நாளில் வந்திருக்குனு சொல்றாங்க, இது ஒரு சுவாரஸ்யமான கோ இன்சிடெண்ட்..
அமித் ஷாவோட பதவிக்காலம், இந்தியாவோட உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு மேம்பாட்டுல பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கு. 370-வது பிரிவு ரத்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களா (ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்) பிரிச்சது, இவர் காலத்துல தான் நடந்தது. இதோட, இடதுசாரி தீவிரவாதம், நக்சல் செயல்பாடுகள், மாவோயிஸ்ட் தாக்குதல்கள் கணிசமா குறைஞ்சிருக்கு.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ரிட்டையர்மென்ட்டா? பாஜக ரூல்ஸ் என்ன? ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை..!
2019-2024 காலகட்டத்தில் இடதுசாரி தீவிரவாதத்தால் உயிரிழப்புகள் 600-க்கு கீழ குறைஞ்சதும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் 70% குறைஞ்சதும் பெரிய சாதனையா பார்க்கப்படுது. ராம ஜன்மபூமி கோயில் கட்டுமானம், புதிய கிரிமினல் சட்டங்களை அறிமுகப்படுத்தியது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) வெற்றிகரமா நிறைவேற்றியது ஆகியவை இவரோட முக்கிய சாதனைகளா சொல்லப்படுது.

இதுக்கு முன்னாடி, அமித் ஷா குஜராத் உள்துறை அமைச்சரா இருந்தவர், பாஜக தேசிய தலைவரா பதவி வகிச்சவர். 2019-ல காந்திநகர் மக்களவை தொகுதியில் எல்.கே. அத்வானியோட வெற்றி வித்தியாச சாதனையையும் (4.83 லட்சம் வாக்குகள்) முறியடிச்சு, 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சு காட்டினார். ஆனா, குஜராத்தில் வேற ரெண்டு பாஜக வேட்பாளர்கள் (நவ்சாரி, வதோதரா) இதை விட பெரிய வித்தியாசத்துல ஜெயிச்சதால, ஷா மாநில அளவுல மூணாவது இடத்துல இருந்தார்.
எல்.கே. அத்வானி, 1998-2004 வரை உள்துறை அமைச்சரா இருந்தவர், பாஜகவோட இணை நிறுவனர்களில் ஒருத்தரும், ஆர்எஸ்எஸ் உறுப்பினருமானவர். 370-வது பிரிவு ரத்து செய்யப்படணும்னு நீண்ட காலமா வாதாடி வந்தவர். அமித் ஷா, அத்வானியோட வழிகாட்டுதலை பின்பற்றி, இந்த சித்தாந்த இலக்கை நிறைவேத்தியிருக்கார். ஆகஸ்ட் 5-ல் நடந்த NDA கூட்டத்துல, பிரதமர் மோடி, “அமித் ஷாவோட சாதனைகள் இந்தியாவோட உள்பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கு,”னு பாராட்டினார்.
இதோட, வடகிழக்கு மாநிலங்களில் பல கிளர்ச்சிகளுக்கு முடிவு கட்டிய பல அமைதி ஒப்பந்தங்களையும் ஷா முன்னெடுத்தார். இவரோட பதவிக்காலம், இந்தியாவோட உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையா பார்க்கப்படுது. ஆனா, இந்த சாதனைகள் பற்றி பேசும்போது, எதிர்க்கட்சிகள், குறிப்பா காங்கிரஸ், “370 ரத்து மற்றும் பிற முடிவுகள் மக்களோட உரிமைகளை பாதிச்சிருக்கு,”னு விமர்சிக்குறாங்க. இந்த மைல்கல், அமித் ஷாவோட அரசியல் செல்வாக்கையும், மோடி அரசின் உறுதியான நிலைப்பாட்டையும் உலகுக்கு காட்டுது.
இதையும் படிங்க: சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கிறாரு!! ராகுல்காந்தியை பங்கமாக கலாய்த்த மோடி!!