வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா ›

இந்தியாவை சீண்டினால் இனி இப்படி தான்… எச்சரிக்கும் அமித்ஷா!

இந்திய மக்கள் மீதான தாக்குதலுக்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தீவிரவாதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 17 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஆட்டம் கண்டுள்ளது.

இந்திய ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது என அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல்! பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய ஆலோசனை!

இந்திய ராணுவத்தை என்னை பெருமை அடைவதாக தெரிவித்த அவர், பகல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி இது என்றும் கூறினார். மேலும், இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு துணை நிற்கும்! முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी