காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகளின் தலங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் தொடர்பாக மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் தீவிரவாதிகளின் தலங்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார். முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: குங்குமத்தை இழந்த பெண்களுக்கு நீதி.. 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு இப்படியொரு காரணமா.?

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எதையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்.. முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவசர ஆலோசனை!