ஆந்திராவில் கோணசீமா மாவட்டம் அந்தர்வேதிபாலம் அருகே கரையை கடந்த மோந்தா புயல். 1632 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் புனரமைக்க ரூ 981.91 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வங்ககடலில் உருவான மோந்தா புயல் ஆந்தராவில் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கோணசீமா மாவட்டம் அந்தர்வேதிபாலம் அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்களான சிகாகுளம் முதல் நெல்லூர் வரை 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தது. இதனால் பல இடங்களில் இருளில் உள்ளது. புயல் கரையை கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விஜயவாடா வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான இடத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் புயல் தாக்கம் குறைந்த பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோந்தா புயல் பாதிப்பு சாலை மற்றும் கட்டிடத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை நிலவரப்படி, மோந்தா புயல் காரணமாக சுமார் தொடர் மழையால் 1,632 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. 69 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் இதுவரை 16 இடங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?
21 இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், பொதுப் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் 6 இடங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 144 இடங்களில் ஏரி மதகுகளில் தேசமடைந்த நிலையில் 36 இடங்கள் புனரமைத்துள்ளனர். புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் சுமார் 130 இடங்களில் சாலைகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 92 இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதுவரை சுமார் 21 இடங்களில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக தற்காலிகமாக சீரமைக்க மொத்தம் ரூ. 98.71 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தந்த சாலைகளின் நிரந்தர சீரமைப்புக்கு தோராயமாக ரூ. 897.38 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர சாலைகளை புதுப்பிக்க 981.91 கோடி ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் மழையின் தாக்கத்தால் வரை 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையை கடந்து மழை நிற்பதற்குள் மேலும் பல ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் அவை மழை நின்ற பின்னர் கணக்கிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் மழை காரணமாக தென் மத்திய ரயில்வே 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 ரயில்கள் மறு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறு ரயில்கள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரட்டிப்போடும் 'மோந்தா' புயல்..!! ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!!