கவுகாத்தி, டிசம்பர் 13: அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிகா கலிதா என்ற பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பலுடன் சட்டவிரோதமாக தொடர்பு வைத்திருந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து பெரும் தொகையை பல வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது 17 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜோதிகா கலிதா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். வேலை விஷயமாக துபாய் சென்றிருந்த ஜோதிகா, அங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ரம்ஜான் முகமது என்ற நபரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புடின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்!! 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால் ஆத்திரம்!
பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகள், மொரீஷியஸ், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு வைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணையில் ஜோதிகா தொடர்புடைய 17 வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை பரிமாற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மேலும், 44 ஏடிஎம் கார்டுகள், செக் புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பாகிஸ்தான் செயற்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கு அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத நிதி பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: NEW DRAVIDIAN STOCK... ALL ARE WELCOME.! திமுக இளைஞரணி சந்திப்புக்கு முதல்வர் அழைப்பு...!