சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்விகளையும் முன் வைத்தார். அவருக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க எழுந்த போது எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பதில் வரை வழங்கினார். உயிராதாரம், உணர்வுரீதியான காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். காவிரி நமக்கு உயிர் ஆதாரங்கள் என்பதை குறிப்பிட்டு பேசினார்.
இந்த வாரத்தில் நாம் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம் என்பதையும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்கக்கூடாது என்ற பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 1969இல் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதித்தது யார் என கேட்டு அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனையில் இரு மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று 1967-ல் பேசியிருப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தை சட்டப்படி அணுக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டு தராது என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே பெங்களூர் செல்ல நினைத்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... வேகம் காட்டும் கர்நாடகா..! என்ன செய்யப் போறீங்க..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!
நேர்மறையான விளைவு வரும் என்பதால்தான் பேசி தீர்க்க முடிவுக்கு முயற்சி செய்ததாகவும் கூறினார். பகைநாடுகளை பிரச்சனையை பேசி தீர்ப்பதை பார்க்கிறோம் என்றும் பக்கத்து மாநிலத்திடம் பேசிப் பார்க்க நினைத்தும் எனவும் தெரிவித்துள்ளார். பெங்களூரு செல்லும் எண்ணத்தை முதலில் கூறியது நான்தான் என்று தெரிவித்துள்ள முதல்வர் விஜய் பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் குறிய விளக்கம் தருவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்... மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல்... எம்எல்ஏக்கள் மௌன அஞ்சலி..!!