டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி வீரரும், ககன்யான் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவருமான சுபான்ஷூ சுக்லா, டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான நிகழ்ச்சியில் இளைஞர்களை நோக்கி தீப்பொறி பேசியுள்ளார்.
“2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்ற ஏஐ தொழில்நுட்பமே மிகப்பெரிய ஆயுதம். நமது இளைய தலைமுறை இதை உணர்ந்து செயல்பட்டால், 2047-க்கு முன்பே நாம் இலக்கை அடைவோம்!” என்று உறுதியாகக் கூறினார்.
“ஏஐ என்பது வெறும் தொழில்நுட்பம் இல்லை… அது அறிவின் புதிய கருவி. இது எதிர்காலத்தில் எல்லா துறைகளையும் மாற்றப் போகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் கூட ஏஐ இல்லாமல் எதுவும் நடக்காது. நாம் இப்போதே இதைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தயாராக்கினால், இந்தியா உலகின் நம்பர் 1 சக்தியாக மாறும்” என்று சுபான்ஷூ சுக்லா உற்சாகத்துடன் பேசினார்.
இதையும் படிங்க: ஸ்பேஸ்ல கூட போயிரலாம்! ஆனா இது முடியாதுப்பா!! சுபான்ஷூ சுக்லா கிண்டல் பேச்சு!

நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, “பிரதமர் மோடி எப்போதும் நாட்டில் உயர்மட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார். ஏஐயை பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
சுபான்ஷூ சுக்லா இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். அமெரிக்காவின் Axiom-4 திட்டத்தில் இடம்பெற்று விண்வெளிக்குச் செல்லவுள்ள இவர், இளைஞர்களிடம் ஏஐயைப் பற்றி பேசியது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “விண்வெளியில் கூட ஏஐ இல்லாமல் எதிர்காலம் இல்லை… அதை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியா 2047-க்குள் $30 டிரில்லியன் பொருளாதாரம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. அதற்கு ஏஐ தொழில்நுட்பமே முக்கிய தூண்டுதல் என்பதை விண்வெளி வீரரே உறுதிப்படுத்தியுள்ளார். இளைஞர்கள் இப்போதே ஏஐ கற்றால், இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகும் என்ற நம்பிக்கையை சுபான்ஷூ சுக்லா ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்பேஸ்ல கூட போயிரலாம்! ஆனா இது முடியாதுப்பா!! சுபான்ஷூ சுக்லா கிண்டல் பேச்சு!