நாசிக் மாவட்டத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும்.
இஸ்லாமியர்களின் புனித நாளான ஷப்-ஏ-பராத் அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளும் உயர்ந்த அழுத்தம் மற்றும் உலோகத் துண்டுகளைக் கொண்டிருந்ததால், பயங்கரமான உயிரிழப்பையும் காயங்களையும் ஏற்படுத்தின.
இதில் முக்கியமாக சாத்வி பிரக்யா சிங் தாக்குர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோகித் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்
இந்த நிலையில், பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், மோசமான விசாரணை நடவடிக்கையே இந்த தீர்ப்புக்கு காரணம் என அதிருப்தி தெரிவித்தார்.
மும்பை ரயில் குண்டு வெடிப்புகளில் விடுதலையை நிறுத்தி வைக்குமாறு மோடி மற்றும் பட்னாவிஸ் அரசாங்கங்கள் விரைவாக கூறியதைப் போல இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்வார்களா என்ற கேள்வியை அவர் முன் வைத்தார்.
என் ஐ ஏ மற்றும் ஏ டி எஸ் அதிகாரிகள் தவறான விசாரணைக்கு பொறுப்பேற்பார்களா என்றும் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக மோடி அரசாங்கம் உருவாக்கியதை உலகம் நினைவில் வைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!