பதிவு தபால் சேவை இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான அஞ்சல் சேவைகளில் ஒன்றாகும்.
இது முக்கியமான ஆவணங்கள், சட்டப் பத்திரங்கள், மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பதிவு தபால் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் கண்காணிக்கப்படுவதற்கு ஒரு தனிப்பட்ட டிராக்கிங் எண்ணைப் பெறுகின்றன, மேலும் பெறுநரால் கையொப்பமிடப்பட்டு பெறப்படும்போது, அது குறித்த உறுதிப்படுத்தல் அனுப்புநருக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்! கடம்பூர் ராஜு பகிரங்கம் மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!
இந்தச் சேவை குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது, அங்கு வேகமான கூரியர் சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை.பதிவு தபால் சேவையானது, இந்திய அஞ்சல் துறையின் முதுகெலும்பாக செயல்படுகிறது.
இந்தச் சேவையை நிறுத்துவது, குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும். இந்தியாவில் உள்ள 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெரும்பாலானவை பதிவு தபால் சேவைகளை வழங்குகின்றன, மேலும் இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான இணைப்பாக செயல்படுகிறது.

இந்த நிலையில், 128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்படுவதாகவும் விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார். பதிவு தபால் சேவை கட்டணத்தை விரைவு தபால் சேவை கட்டணத்தோடு ஒப்பிட்டு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26 என்றால் விரைவுத் தபால் எனில் ரூ 41 எனக் கூறி உள்ளார். பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3 என்றால் விரைவுத் தபாலில் ரூ 10 எனக்கு குறிப்பிட்டுள்ளார்.
பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும் என்று தெரிவித்த அவர், விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும் என சுட்டிக்காட்டினார்.
பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும் என்றும் தெரிவித்த சு.வெங்கடேசன், தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம் தான், ஆனால் விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும்.,தூரம் கூடினாலும் கூடும் என்று தெரிவித்தார்.
இவையெல்லாம் மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு இன்று குற்றம் சாட்டியுள்ள அவர், தக் சேவா; ஜன் சேவா என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவை என கூறுகிறார்கள்., ஆனால் உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ரத்தமும், தண்ணீரும் ஒன்னா பாய முடியாது! தீவிரவாத இலக்கை அழிப்பதே நோக்கம் - அமைச்சர் ஜெய்சங்கர்..!