பூட்டான் பிரதமர் டாஷோ செரிங் டோப்கே, தனது மனைவி ஆம் தாஷி டோமா மற்றும் பூட்டானின் தலைமைப் பிக்கு ஜே கென்போ ட்ருல்கு ஜிக்மே சோயெத்ரா ஆகியோருடன் (செப்டம்பர் 5) இன்று அயோத்தியில் உள்ள ஶ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலுக்கு வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இந்தியாவிற்கு செப்டம்பர் 3 முதல் 6 வரை நடைபெறும் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைந்தது. இவர்களை உத்தரப் பிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி மற்றும் எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா ஆகியோர் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: பாமக பிரமுகர் ம.க. ஸ்டாலினை கொல்ல முயற்சி... பெட்ரோல் குண்டு வீசிய மர்மகும்பல்!
காலை 9:30 மணியளவில் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் அயோத்தி வந்தடைந்த பிரதமர், ராமர் கோவிலில் பிரார்த்தனைகள் செய்து, புனித சடங்குகளில் பங்கேற்றார். கோவில் வளாகத்தை பார்வையிட்ட அவர், குபேர் திலாவில் உள்ள குபேறேஸ்வர் மகாதேவுக்கு ஜலாபிஷேகம் செய்தார்.
மேலும் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு விருந்து நடத்தப்பட்டது. பகல் 1:30 மணியளவில் அவர் அயோத்தியிலிருந்து புறப்பட்டார். இந்தப் பயணம் இந்தியா-பூட்டான் இடையேயான நெருக்கமான கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை வெளிப்படுத்தியது.

இதற்கு முன், நேற்று பீகாரில் உள்ள ராஜ்கீரில் ராயல் பூட்டான் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புது தில்லியில் பிரதமரை சந்தித்தார். இந்த வருகை, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியது. பிரதமர் டோப்கே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை “பெரிய அண்ணன்” எனக் குறிப்பிட்டு, இரு நாடுகளின் உறவைப் புகழ்ந்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பாவம்! தன்னோட நல்லத மட்டுமே இபிஎஸ் பாக்குறாரு… ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு