ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் வால்வோ பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னதேகுரு அருகே காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து உலிந்தகொண்டாவில் அருகே சென்றபோது இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், குறுக்கே வந்தே பைக் பேருந்து மீது மோதியது.
அப்போது பைக்கின் பெட்ரோல் டேங்கில் பற்றிய தீயானது, மளமளவென பேருந்தின் முன்பக்கத்தில் பரவியது. சிறிது நேரத்திற்குள், முழு பேருந்தும் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையானது. இந்த பேருந்தில் டிரைவர் கிளினர் உள்பட மொத்தம் 42 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 21 பேர் பேருந்தின் ஜன்னலை உடைத்து தப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் உள்ளனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தீக்காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோரச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் களம்... NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்...!
இந்த நிலையில் பேருந்து தீ விபத்து சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா விரைவில் நக்சல் தீவிரவாதம் இல்லாத நாடாக மாறும்..!! பிரதமர் மோடி உறுதி..!!