அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சந்திரபாபு, 1978 ஆம் ஆண்டு சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வெறும் 28 வயதில் சட்டமன்ற உறுப்பினராகவும், இளம் அமைச்சராகவும் ஆனார். தேசிய அரசியலிலும் சந்திரபாபு முக்கியப் பங்காற்றினார். 1996-1998 இல் யுனைடெட் பிரண்ட் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, தேவகவுடா மற்றும் குஜ்ரால் அரசுகளை ஆதரித்தார்.
1999 இல் NDA கூட்டணியில் TDP இடம்பெற்று, வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு அளித்தது.2004 இல் காங்கிரஸ் தலைமையிலான YSR அரசுக்கு தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானார். 2014 இல் ஆந்திரா பிரிந்த பிறகு, மீண்டும் முதலமைச்சராகி அமராவதியைத் தலைநகராக அறிவித்தார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 2014-2019 ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேச ஃபைபர்நெட் திட்டத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் உயர்தர இணைய இணைப்பை (ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்) வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. குறிப்பாக, Phase-1 பணிகளுக்கான டெண்டர் செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாகவும், அரசுக்கு சுமார் 114 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி... ரவுடி ஜெயபாலை தட்டி தூக்கிய போலீஸ்...!
114 கோடி ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முறை கேட்டில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுவிக்கப்பட்டுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது சந்திரபாபு நாயுடுமீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. ஏற்கனவே இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பைபர் நிறுவன ஊழல் வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதையும் படிங்க: ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு..! மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்க போகுது... அதிமுக முக்கிய அறிவிப்பு...!