இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 300 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்சலைட் பிரச்சினைக்கு முற்றிலும் முடிவுகட்ட பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10,000 வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கரேகட்டா, நட்பள்ளி மற்றும் புஜாரி கன்கெர் வனப்பகுதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில்2026 மார்ச்சுக்குள் நாடு முழுதும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நக்சல்களுக்கு எதிராக 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' என்ற நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது.
இதையும் படிங்க: K9 ROLO..! நாலு கால் சாகச வீராங்கனைக்கு CRPF மரியாதை.. துணிச்சல்காரிக்கு கிடைத்த உயரிய கவுரவம்..!

இந்த முயற்சியில் ஏப்ரல் 21 முதல் மே 11 வரை 21 நாட்களில் சிஆர்பிஎப் வீரர்கள், மாநில போலீசார் இணைந்து 31 நக்சலைட்களை சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினரின் அதிரடிக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான நக்சலைட்கள் தப்பியோடியதுடன் பலர் சரணடைந்தனர்.பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைக்கு சத்தீஸ்கரின் கல்ஹாம் பகுதியில் 2022ல் அமைக்கப்பட்ட முகாம் முக்கிய பங்கு வகித்தது.
இங்கு தான் நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன. இங்கிருந்துதான் தகவல்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.தாங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை நக்சல்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நக்சலைட்கள் ஆதிக்கத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வந்ததனர். இப்போது மத்திய அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையால் த்தீஸ்கர் மாநிலத்தில் 17 கிராமங்கள் முதல் முறையாக மின்சார வசதியை பெற்றுள்ளன. அம்பாகர்க் சவுக்கி மோஹ்லா, மன்பூர் ஆகிய மாவட்டங்களின் கீழ் உள்ள இந்த கிராமங்கள் அனைத்தும் நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை.

மலையும், அடர்த்தியான வனப்பகுதி கொண்ட கிராமங்கள் ஆகும். கிட்டத்தட்ட 3 கோடி ருபாய் செலவில் அரசின் திட்டத்தின் கீழ், இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. மொத்தம் 540 குடும்பங்கள் மின்சார வசதியை பெறுகின்றனர். இதில் ஏற்கனவே 274 குடும்பங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற குடும்பங்களுக்கும் மின்சாரம் பெறும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. அதிக பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதே அரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..!