இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 300 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்சலைட் பிரச்சினைக்கு முற்றிலும் முடிவுகட்ட பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10,000 வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கரேகட்டா, நட்பள்ளி மற்றும் புஜாரி கன்கெர் வனப்பகுதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் வைக்கும் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்பு படையினர் இறப்பதும் ஒரு பக்கம் அதிகரித்தது. இதனால் கண்ணி வெடிகளை கண்டறிந்து அகற்றிட சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு உதவியாக அவர்களது படையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்.. அண்ணனையே போட்டுத் தள்ளிய தங்கை..!

இதன்படி கர்நாடகாவின் பெங்களூரு அருகே உள்ள தாராலுவில் உள்ள CRPF நாய் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 2 வயதுடைய பெல்ஜியன் ஷெப்பர்டு வகை மோப்ப நாயான ரோலோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய ரிசர்வ் காவல் படையில் சேர்க்கப்பட்டது. ரோலோவுக்கு கடந்த மாதம் தான் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் அமைந்துள்ள கொர்கோட்டாலு மலைப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் 21 நாள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது காட்டுக்குள் மறைந்திருக்கும் வெடிபொருட்கள் மற்றும் IEDகளை மோப்பம் பிடிக்க ரோலோ தனது குழுவுடன் அனுப்பப்பட்டாள். கடந்த மே 11ஆம் தேதியுடன் இத்தாக்குதல் நடவடிக்கை நிறைவடைந்தது. இக்காலகட்டத்தில், அம்மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட இந்தத் தாக்குதலில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று, அங்குள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதில், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்குச் சொந்தமான ‘ரோலோ’வையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. தேனீக்களிடமிருந்து ரோலோவைக் காப்பாற்றும் முயற்சியில் அதன்மீது பாலிதீன் தாளைக் கொண்டு மூடியுள்ளனர்.

அதனுள் புகுந்த தேனீக்கள் தொடர்ந்து தாக்கியதில் ரோலோ அந்த தாளைவிட்டு வெளியே ஓடியுள்ளது. மேலும், சுமார் 200க்கும் மேற்பட்ட தேனீக்கள் தாக்கியதில் ரோலோ அங்கேயே மயங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரோலோவை மீட்ட பாதுகாப்புப் படையினர், கால்நடை மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோலோ ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ரோலோவின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவர் எல்லா வகையிலும் ஒரு சிப்பாய் என சி.ஆர்.பி.ஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். அவளது துணிச்சலையும் சேவையையும் அங்கீகரிக்கும் விதமாக அவளது இறுதி சடங்கில் CRPF பணியாளர்கள் ரோலோவுக்கு தலைகீழாக ஆயுத வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். CRPF இயக்குநர் ஜெனரல், அவரது மரணத்திற்குப் பின், நாய்க்குட்டிக்கு வழங்கப்படும் அரிய கௌரவமான DG's commendation disc ஐ வழங்கி அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: கணவனை தீர்த்துக்கட்ட ரூ.20 லட்சம்.. கூலிப்படையிடம் பேரம்.. செட்டில்மெண்ட் செய்யாததால் சிக்கிய பரிதாபம்..!