பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக உள்ளார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன். பீகார அரசியலின் இளம் முகமாக உருவெடுத்த இவர், 2015ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் இருந்து அரசியல் அரங்கில் இறங்கினார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் மகாகத்பந்தன் தலைவராக செயல்பட்டு, தனது கட்சியை வலுப்படுத்தினார். அப்போது அவர் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் 2022ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் கூட்டணி மாற்றத்தால் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார்.
இதையும் படிங்க: நாங்க அப்படி இல்ல... சொல்றத தான் செய்வோம்..! பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி திட்டவட்டம்...!
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் தேஜஸ்வி யாதவ் மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்துள்ளார். பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். அடுத்த 20 மாதங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். வேலையில்லா இளைஞர்களின் வேதனைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்க அப்படி இல்ல... சொல்றத தான் செய்வோம்..! பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி திட்டவட்டம்...!