சென்னையில் இருதினங்களுக்கு முன்பு மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக கனமழை பெய்திருந்தது. இதனால் பல இடங்களில் ஒரு மணிநேரத்திற்குள் 100 மி.மீக்கும் அதிமாக மழை பெய்திருக்கிறது.
அதேபோல புதுச்சேரியிலும் மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோக்துங்கன் வெளியிட்டிரும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, "சென்னையில் நேற்று இரவு நிகழ்ந்த மேகவெடிப்பு நிகழ்வைக் கருத்தில் கொண்டு, அனைத்து ESF/துறை சார்ந்த அலுவலகங்களும் உடனடியாகத் தங்களது கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அவசரகாலத் திட்டங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
சென்னை வானிலை மையம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், மேகவெடிப்பு நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க முடியாததாலும், அவை நிகழ்ந்த பிறகே கண்டறியப்படுவதாலும், அதிகபட்ச எச்சரிக்கை அவசியம். வட இந்தியப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களால் கடந்த காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு.. 4 பேர் உயிரிழப்பு.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்..!!
புதுச்சேரிக்கு சென்னை புவியியல் ரீதியாக மிக அருகில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அனைத்து ESF துறைகளும் - குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் மற்றும் காவல் துறை - உயர் எச்சரிக்கை நிலையில் இருந்து, எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுக்கும் உடனடியாக பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பின்வரும் ஆயத்த நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு துறைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன:
1.தேங்கியுள்ள நீரை வெளியேற்ற, பொதுப்பணித் துறை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
2. தகவல் மற்றும் விளம்பரத் துறை மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் (மரங்கள்/மின்கம்பங்கள்/பழைய கட்டிடங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகள்/ஏரிகள் அருகே செல்வதைத் தவிர்க்கவும், வீடுகளை விட்டு வெளியேறும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது).
3.அவசரகால நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
4. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
5. எந்தவொரு அவசர நிலையிலும் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த காவல் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு.. 33 பேர் பரிதாப பலி..!!