உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தாராளி கிராமத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாசியில் உள்ள தாராளி கிராமத்தில ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக அங்கிருந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு என்பது நிலச்சரிவுக்கு ஒப்பிட்ட அளவில் அதிகமாக ஏற்பட்டு தாராளி கிராமத்தில் இருந்த 30க்கும் அதிகமான வீடுகள் தற்போது முழுமையாக மூழ்கியுள்ளன. 50க்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள். தற்போதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என அனைவருமே ஒன்றாக இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோரவிபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதாகவும், கூடுதலாக சம்பவ இடத்திற்கு இந்தோ திபத் பார்டர் போலீஸ் மூன்று குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அமித்ஷா தனது சமூக வலைதள பக்கமான எக்ஸில் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!
தற்போதைய நிலவரப்படி, தோராயமாகவே 50 பேர் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் மாயமாகியுள்ளதால், காணாமல் போனவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Can you imagine????
It's totally disturbing pic.twitter.com/YmfjgsVako
— Doctor_ Desh_Hit (@DrDeshHit) August 5, 2025
இதையும் படிங்க: சாதி வெறி மிருகம்! அவன வெளிய விடாதீங்க... நெல்லைக்கே தாதா- னு சொல்லுவான்! கவின் தந்தை குமுறல்.