தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் நெருக்கமாகப் பழகும் வகையில் தொடங்கியுள்ள “வைப் வித் எம்கேஎஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடு வெளியாகியுள்ளது. இந்த எபிசோடில் இசை, பாடல்கள் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து ஆழமான கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் அந்தோனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இளம் இசைக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய இளமைக்காலத்தில் விரும்பிக் கேட்ட பாடல்கள் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: “என் இளமைப் பருவத்தில் டிடிகே என்ற கேசட் ஒன்று வைத்திருப்பேன். அதில் பல பாடல்களைப் பதிவு செய்து கேட்டுக்கொண்டிருப்பேன். குறிப்பாக மிகப் பழைய பாடல்களைத்தான் அதிகம் விரும்பிக் கேட்பேன். எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதையும் படிங்க: ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்!
‘மன்னாதி மன்னன்’ படத்தில் வரும் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா...’ என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்டேன். அதேபோல் ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமானது.”
The soul of Tamil Nadu speaks through its music. It inspires, it preserves, it evolves.🎶
Spent time with some of our talented musicians, to understand their craft, their energy, their world. They are not just creating music; they are keeping our heritage alive and shaping its… pic.twitter.com/BUKDy7QlWQ
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 15, 2026
பாடகி பிரியங்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, முதல்வர் அந்தப் பாடலைப் பாடிக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் பாடல்களை அதிகம் கேட்டாலும், இன்றைய இளம் தலைமுறையினரின் பாடல்களையும் கேட்பதாகக் குறிப்பிட்டார். சூழலுக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கேட்பதாகவும், குறிப்பாக அனிருத் இசையமைத்த பாடல்களை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல் எபிசோடில் விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய முதல்வர், இப்போது இசைத் துறையில் இளைஞர்களுடன் இணைந்து மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சி இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழக சட்டசபைக்கு ஏப்.,10-க்குள் தேர்தல்!! பிப்.,-யில் வெளியாகுது அறிவிப்பு!! பத்திக்கிச்சு எலெக்ஷன் ஜுரம்!