2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சி அமைத்து 100-வது நாள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், முதலமைச்சருடைய அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் இந்த 100 நாள் சாதனைகள் குறித்த காணொளி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
மே 10-ஆம் தேதி ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம், இன்றுவரை பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை திட்டம் தொடங்கிய காணொளி, போதைப்பொருள் ஒழிப்புக்காக ‘ஸ்டார்ட் ரன்’ என்ற பெயரில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான், மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் முன்னோட்டமாக குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?
அதேபோல, ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தையும் தொடங்கி வைத்திருந்தார். தனது சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார்.
இதுபோல பல்வேறு இடங்களில் முதலமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அதேபோல, போக்குவரத்துத் துறையில் புதிதாக பேருந்துகளையும் தொடங்கி வைத்திருந்தார்.
இவ்வாறு, இந்த 100 நாட்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது உள்ளிட்டவற்றை 100 நாள் சாதனைகளாக தொகுத்து, முதலமைச்சருடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தற்போது ஒரு காணொளி பதிவிடப்பட்டுள்ளது.
100 நாள் ஆட்சி
ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி
100 Days of Governance
A Government for Generations#CMJosephVijay pic.twitter.com/so1MP9Mw96
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 17, 2026
இதையும் படிங்க: முக்கிய மீட்டிங்கில் உதயநிதி ஆப்சென்ட்.. முதல்வர் விஜய்யுடன் மோதல் தீவிரம்.. பரபரப்பு சம்பவம்!