உதகையில் இன்று ஆட்டோ, டூரிஸ்ட் டாக்ஸி, மேக்ஸி கேப், ஜீப் சுமோ, உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
உதகையில் சுற்றுலா தலங்களுக்கு இடையே தனியார் மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் அனுமதி வழங்க உள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு இடையே மினி பஸ் இயக்கினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று கூறி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் திறப்பு... உதகை செல்வோர் கொஞ்சம் உஷாரா போங்க...மாவட்ட நிர்வாகம் திடீர் மாற்றம்...!
தற்போது உதகையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள், டூரிஸ்ட் டாக்ஸிகள் , மற்றும் Mazda, ஜீப் சுமோ, போன்றவற்றை வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனர் .
ஆட்டோ ஓட்டுநர்கள் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் சுற்றுலா தலத்திற்கு மினி பஸ் இயக்கினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கபடும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் மனு அளித்தனர் .
இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியது.
ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து சுற்றுலாத்தலங்களுக்கு மினி பஸ் இயக்குவது தொடர்பாக ஆட்டோ மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் அளித்த புகார் மனு மீதான முறையான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை .
இதனை கண்டித்து உதகையில் உள்ள 800 ஆட்டோக்கள், 200 மேக்ஸ்கேப்கள், 1000 டூரிஸ்ட் டாக்ஸிகள், 400 ஜீப் சுமோக்கள் இயங்காது என அதன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது .
இதையும் படிங்க: ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...!