• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”எக்காரணம் கொண்டும் அப்படி நடக்கக்கூடாது”... காலை உணவு திட்டத்தை தொடங்கிய கையோடு சி.எம். விஜய் எச்சரிக்கை...!

    மழலையர் வகுப்பறைக்குச் சென்று அங்கு குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன
    Author By Amaravathi Tue, 22 Sep 2026 11:07:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay warning about breakfast scheme

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.

    முதலமைச்சர் விஜய் இன்றைய தினம் இந்தப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார் என்பதை அறிந்த பொதுமக்கள், காலை முதலே இந்தப் பகுதியில் திரண்டிருந்தனர். குறிப்பாக, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்களும் முதலமைச்சரை பார்ப்பதற்காக பள்ளி வளாகத்தின் வாயிலில் திரண்டிருந்ததால், இங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையடுத்து, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதலமைச்சர் விஜயின் வாகனம் நேரடியாக பள்ளிக்கு வந்தபோது, பள்ளிக்கு வெளியே ஏராளமான மக்கள் நீண்ட நேரமாகக் காத்திருப்பதை அவர் பார்த்தார்.

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    இதையடுத்து, முதலமைச்சர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்ததுடன், அவர்களை நோக்கி கையசைத்தார். அதன்பிறகே விழா நடைபெற இருந்த அரங்கிற்கு சென்றார்.

    இந்த சந்திப்பின் காரணமாக, காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முதலமைச்சரை நேரில் பார்த்த மக்களின் உற்சாகத்தையும் அங்கு காண முடிந்தது.

    இதன்பிறகு, விழா காலை சுமார் 8.40 மணியளவில் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    அந்த மாணவ, மாணவிகளுடன் அருகில் அமர்ந்த முதலமைச்சர் விஜய், அவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட உணவையே தானும் உண்டார்.

    அதன் தொடர்ச்சியாக, பள்ளி வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களுக்குச் சென்று பள்ளியின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார். ஒரு சில வகுப்பறைகளையும் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.

    குறிப்பாக, மழலையர் வகுப்பறைக்குச் சென்று அங்கு குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன, ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை எவ்வாறு உள்ளது, மாணவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன, அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

    அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கு அருகே உள்ள வாயிலில் ஏராளமான மக்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மாடிக்குச் சென்று பொதுமக்களை நேரில் பார்த்து கையசைத்தார்.

    முதலமைச்சரைப் பார்த்த பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்தனர்.

    இதன்பிறகு மீண்டும் பள்ளி வளாகத்திற்கு கீழே வந்த முதலமைச்சர் விஜய், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் சிறிது நேரம் பேசினார். பள்ளியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எவ்வாறு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் கேட்டறிந்தார்.

    மேலும், எந்தச் சூழலிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எந்தவிதமான குறைபாடும் இருக்கக் கூடாது என்றும், குறைபாடு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்பிறகு முதலமைச்சர் விஜய் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே வந்தார். அப்போதும் அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டிருந்தனர்.

    பள்ளி வளாகத்திற்கு வெளியே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறங்களிலும் பெற்றோர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் திரண்டிருந்தனர். அவர்களை நேரில் பார்த்த முதலமைச்சர் விஜய், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இதையும் படிங்க: செப்.17 CM விஜய் விருதுநகர் விசிட்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. வேகம் காட்டும் பெண் அமைச்சர்கள்!!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share