பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோள், எல்.வி.எம்.- எம்5 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சி.எம்.எஸ்.03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இதுவரை புவிவட்ட பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். குறைந்தபட்சம் 170கி.மீ., அதிகபட்சம் 29,970கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க்கப்பல்கள், விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும் என தகவல் வெளியாகி உள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. பரந்த கடற் பகுதிகளிலும் இந்திய நிலப்பரப்பிலும் தொலைத்தொடர்பு சேவைகளை தடையின்றி வழங்கும் ஆற்றல் கொண்டது. நாட்டின் ராணுவ பயன்பாடு, தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோவின் சி.எம்.எஸ்-03 தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயம் தர வேணும் கோவிந்தா!! நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்! இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு
பூமியில் இருந்து புறப்பட்ட, 16-வது நிமிடத்தில் செயற்கைக்கோளை 179 கி.மீ., உயரம் உள்ள புவி ஒத்திசைவு சுற்று பாதையில் ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய எஸ்.வி.எம்-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டி... இந்திய அணி அபார வெற்றி...!