மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் 2006ஆம் ஆண்டு உள்ளூர் மின்சார ரயில்களில் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. மொத்தம் 189 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் 800-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி 12 பேர் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. கமல் அன்சாரி, முகமது பைசல் அத்தவுர் ரஹ்மான் ஷேக், எஹ்தேஷாம் குதுபுதீன் சித்திக், நவீத் உசேன் கான் மற்றும் ஆசிப் கான் ஆகிய 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், தன்வீர் அகமது முகமது இப்ராஹிம் அன்சாரி, முகமது மஜித் முகமது ஷாஃபி, ஷேக் முகமது அலி ஆலம் ஷேக், முகமது சாஜித் மார்குப் அன்சாரி, முசம்மில் அத்தவுர் ரஹ்மான் ஷேக், சுஹைல் மெஹ்மூத் ஷேக் மற்றும் ஜமீர் அகமது லதியூர் ரஹ்மான் ஷேக் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் கடந்த 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.

இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது எனவும் கூறி அவர்களை தண்டனை ரத்து செய்து 12 பேரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்த காம மிருகங்கள்... சாகும் வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
இந்த நிலையில் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தற்போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 12 பேரின் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத்தடையை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்... மரக்கட்டையால் தாக்கப்பட்ட கொடூரம்..!