இந்தியாவில் சமீபகாலமாக ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓடிடி தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ என பல்வேறு ஓடிடி தளங்களும் அதனை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த ஓடிடி தளங்கள் வந்த பின் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்த ஓடிடி தளங்களில் பயன்பாட்டுக்கேற்ப கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் ஜூன் 17ஆம் தேதி முதல் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே யுஎஸ், யுகே போன்ற நாடுகளில் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவிலும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த விளம்பர ஸ்ட்ரீமிங்கை தவிர்க்க வேண்டுமானால், ஆட்-ஆன் திட்டங்கள் போல 2 திட்டங்கள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆபாச காட்சிகள்.. அமேசான், நெட்பிளிக்ஸிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி...!

அதன்படி, ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் கூடுதலாக கட்டணம் செலுத்தி ஆட்-ப்ரீ திட்டங்களாக மாற்றி கொள்ளலாம். ரூ.129 செலுத்தினால், மாதம் முழுவதும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படாது. அதேபோல ரூ.699 செலுத்தினால், வருடம் முழுவதும் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படாது. இந்த வருடாந்திர ஆட்-ப்ரீ திட்டத்தின் விலை ரூ.999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.699 விலைக்கு அமேசான் நிறுவனம் கொடுக்கிறது. ஆகவே, ஜூன் 17ஆம் தேதி முதல் கூடுதல் செலவில் இந்த திட்டங்கள் கிடைக்க இருக்கின்றன.

விளம்பரங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டால் பரவாயில்லை என்கிற சந்தாதாரர்களுக்கு பழைய கட்டணமே இருக்கும் என கூறப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை பொறுத்தவரையில் ரூ.299 விலை முதல் தொடங்குகிறது. இதற்கு ஒரு மாதம் சந்தா கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு ரூ.599 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.1,499 விலைக்கு திட்டங்கள் இருக்கின்றன. அமேசான் பிரைம் லைட் திட்டத்தில் 12 மாதங்களுக்கு ரூ.799ஆக விலை இருக்கிறது. இந்த விலையுடன் ஜூன் 17ஆம் தேதிக்கு பிறகு விளம்பரங்கள் அல்லாத ஆட்-ஆன் திட்டங்களும் கூடுதல் விலைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா..! பாக். சார்ந்த ஓடிடி நிகழ்ச்சிகளுக்கு தடை..!