• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வந்தே மாதரம் 6 சரணங்களும் கட்டாயமா? மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

    வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களை கட்டாயம் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 27 Oct 2026 17:27:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Compulsory Recital of All 6 Stanzas of 'Vande Mataram': SC Issues Notice to Centre.

    தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களையும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் முழுமையாகப் பாடவும் இசைக்கவும் வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல மனுக்கள் தொடர்பாக, மத்திய அரசு விரிவான பதிலளிக்க இந்திய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 மற்றும் ஜூலை 9 (2026) ஆகிய தேதிகளில் பிறப்பித்த சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளை எதிர்த்து, பௌத்த மத ஆர்வலரும் அம்பேத்கரியச் செயற்பாட்டாளருமான பி.டி. போர்கர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் சத்யபாமா மாவோஜி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று தீவிர விசாரணைக்கு வந்தன.

    centralgoverment

    மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. மோகன் கோபால் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் "பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய ‘ஆனந்தமடம்’ நாவலில் இடம்பெற்றுள்ள வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டின் இயற்கை எழிலையும் வளத்தையும் போற்றும் வகையில் அமைந்துள்ளன. இதனால் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தேசிய நிகழ்வுகளில் அந்த முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே ஒருமித்த கருத்துடன் பாடப்பட்டு வந்துள்ளன. ஆனால், அடுத்த நான்கு சரணங்களில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட இந்துக் கடவுள்கள் குறித்த வெளிப்படையான வழிபாட்டுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நாடு கடத்த தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அனைத்து ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என உத்தரவிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எவ்விதமான சட்டரீதியான அதிகாரமும் இல்லை. இத்தகைய கட்டாய உத்தரவானது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பான மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. மேலும், குடிமக்களின் மனசாட்சி மற்றும் மதச் சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 25, கருத்துச் சுதந்திரத்தை வழங்கும் பிரிவு 19 மற்றும் வாழ்வுரிமை, கண்ணியத்தைப் பாதுகாக்கும் பிரிவு 21 ஆகிய அடிப்படை உரிமைகளை இது அப்பட்டமாகப் பறிக்கிறது.

    குறிப்பிட்ட மதக் கோட்பாடுகள் கொண்ட சரணங்களைப் பாட விருப்பமில்லாத குடிமக்கள் அதனைப் பாட மறுப்பதாலேயே, அவர்களைத் தேசியப் பாடலை அவமதிப்பவர்களாகக் கருத முடியாது. எனவே, பாடலைப் பாடாதவர்கள் மீது அபராதம் அல்லது எவ்விதமான குற்றவியல் தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது" என வாதிடப்பட்டது.

    மனுதாரர் தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தது.

    இதையும் படிங்க: மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை..! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    "நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு ஆய்வு: ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாடு
    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    இந்தியா
    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    ஒவ்வொரு பிரச்சனையையும் அரசியலாக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

    இந்தியா
    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    நவம்பர் 1-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி தலைமை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share