பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்தது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. 7.45 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தல், 1951 முதல் பீகாரின் அதிக வாக்காளர் பங்கேட்பை (67.13%) பதிவு செய்தது. ஆனால், இந்த உற்சாகமான பங்கேட்புக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் பின்னடைவை சந்தித்தது. 2020 தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை வெறும் 2 முதல் 7 இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது.
இது கட்சியின் அரசியல் செல்வாக்கின் சரிவை வெளிப்படுத்துகிறது. எதிர்பாராத வகையில் காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், பீகார் மக்களின் தீர்மானத்தை நாங்கள் மதிக்கிறோம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளது. தேர்தல் முடிவுகளை விவரமாக ஆய்வு செய்து, அதற்கான காரணங்களைப் புரிந்துகொண்ட பிறகு முழுமையான மதிப்பீட்டை முன்வைப்போம் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

மகா கூட்டணியை ஆதரித்த பீகார் வாக்காளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் ஒவ்வொரு காங்கிரஸ் பணியாளருக்கும் நான் சொல்ல விரும்புவது மனச்சோர்வு அடைய வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நீங்கள் எங்கள் பெருமை, மரியாதை மற்றும் அடையாளம். உங்கள் உழைப்பே எங்கள் அமைப்பின் உண்மையான வலிமை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி... செல்வப் பெருந்தொகை பதிலடி...!
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் எங்கள் முயற்சி தொடர்ந்து இருக்கும் என்றும் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் முயற்சியை மக்களுடன் இணைந்து முன்னெடுத்துக்கொள்வோம் எனவும் கூறினார். இது நீண்ட போராட்டம். முழுமையான அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் உண்மையுடன் அதனை தொடர்வோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING "காங்கிரஸை கலைத்துவிடுங்கள்..." - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்...!