நம் நாட்டில் சுமார் 28 கோடி பேர் தனிப்பட்ட கடனாளிகள் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 140 கோடிக்கு அதிகமான மக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இவர்களது கடன் விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் மத்திய அரசு அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.
அதில், கடந்த மார்ச் மாதம் நிலவரத்தின்படி கிரெடிட் கார்டு தகவல் நிறுவனமான சிவில் தெரிவித்துள்ள விவரங்களை அடிக்கோடிட்டு காட்டிய மத்திய அரசு, சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் இந்தியாவை வருவதாக தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான சராசரி கடன் 4.8 லட்சமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தது. இது சராசரி கடன் அல்ல என்றும் 2023ல் 3.9 லட்சமாக இருந்த கடனானது அதிகரித்துள்ளதாகவும் கிரெடிட் மதிப்பெண் அதிகமாக உள்ள நபர்களுக்கு இந்த படங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் சொத்து உருவாக்கத்திற்காகவே அவர்கள் கடன்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!
குடும்ப நிதி சொத்துகள் ஜி.டி.பி.யுடன் ஒப்பிடும்போது, 103.5 சதவீதமாக 2023-ல் இருந்தது என்றும் 2024-ல் 106.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளது. இது மக்கள் நிதி நிலை மேம்பட்டிருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,இந்தாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.61.47 லட்சம் கோடி என்றும் இது கடந்த ஆண்டைவிட 10.1 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனாலும், வெளிநாட்டு கடன் ஜி.டி.பி. விகிதம் 19.1 சதவீதம் மட்டுமே என்பதால், சீரான கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "கவாச்" குறைபாடு... காதுலையே வாங்கல..! மத்திய அரசை சாடிய கனிமொழி..!