வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை மறுநாள் மோன்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்.27ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல்..!! சென்னையை நெருங்கும் ஆபத்து..?? வானிலை சொல்வது என்ன..?
கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த புயலுக்கு தாய்லாந்து வெச்ச பெயர் இதுதானாம்..!! இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..??