தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷன் முதல் கேட்டில் நவம்பர் 10 அன்று மாலை 6:52 மணிக்கு நடந்த சக்திவாய்ந்த கார்வெடிப்பு, மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 13 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தான் சார்ந்த ஜெய்ஷ்-இ-மொஹமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் முறைகேடான சதியின் பகுதியாக இது இருக்கலாம் என தேசிய விசாரணை அமைப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியளிப்பதாக, இந்த சதியில் ஈடுபட்ட அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
அவர்கள் ஒயிட் காலர் பயங்கரவாதிகளாக மூளைச்சலவை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டனர். குண்டுவெடிப்பின் போது முன்னின்று நடத்திய உமர் நபி உடல் சிதறி உயிரிழந்தார். அவர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர். புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உத்தரப் பிரதேசத்தின் லக்னாவைச் சேர்ந்த ஷஹீன் ஷயீத், காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த அதீல் அகமது ராதர், தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரின் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் பணியாற்றிய தஜமுல் ஆகிய மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் கார் வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவருக்கும் மேற்பட்டோர் எல் என் ஜே பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குண்டு வெடிப்பு பயங்கரம்..! சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி... பிரதமர் மோடி திட்டவட்டம்...!
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்று தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: கோவாவில் வெற்றிகரமாக நிறைவுற்ற அயர்ன்மேன் 70.3..!! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!