இந்திய ராணுவ வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாக இன்று அரசு அறிவித்தபடி, தற்போதைய ராணுவத் துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் உபேந்திர திவேதியின் ஓய்வுக்குப் பிறகு இவர் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நியமனம், ராணுவத்தின் தொடர் மறுசீரமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், இந்திய ராணுவத்தின் மிகவும் அனுபவமிக்க அதிகாரிகளில் ஒருவர். 1986 டிசம்பர் 20 அன்று இந்திய ராணுவத்தில் ரெஜிமெண்டில் கமிஷன் பெற்ற இவர், ஆயுதப்படையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான பணி அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா மற்றும் இந்திய இராணுவ அகாடமி, தேரதுன் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் இவர். மேலும் உயர்மட்ட பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர். DSSC-யில் தனது பாடத்திட்டத்தில் சிறந்த முழுமையான மாணவராக அங்கீகரிக்கப்பட்டவர். இவரது இராணுவப் பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் இடம்பெற்றுள்ளன. ஜம்மு & காஷ்மீரில் Uniform Force-ஐ தலைமை தாங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியாஅசத்தல்!
2023 நவம்பரில் South Western Command-ஐயும், 2024 ஜூலை முதல் 2026 மார்ச் வரை Southern Command-ஐயும் தலைமை தாங்கினார். 2026 ஏப்ரல் 1 முதல் ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். தற்போது, ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!