சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) இயக்கத்தைப் புகழ்ந்து பேசினார். அவர், “அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு இயக்கம் அதிமுகவை வழிநடத்துவது நல்லது தானே?” என்று கூறினார். மேலும், நடிகர் விஜய்யின் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை அதிமுக பின்பற்றுவது வரவேற்கத்தக்கது என்றும், இதைப் பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தக் கருத்து, அதிமுகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அதன் திராவிடக் கருத்தியல் பின்னணியை மையப்படுத்தி பலரிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர், அதிமுகவை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது என்று எல்.முருகன் பேச்சை சுட்டிக்காட்டி பேசினார்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதா வார்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்கினால் என்ன தவறு என்று பேசுவதை தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார். ஜெயலலிதா கொள்கையிலிருந்து தவறவில்லை என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை எனவும் அமீர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திட்டார்… ஏமாந்துட்டோம்! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரேமலதா
அதிமுக தற்போது யாருடைய கையில் இருக்கிறது என்று தெரியும் என விஜய் பேசி இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், கொள்கை பிடிப்புள்ள தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றும் எந்தக் கொள்கையும் எடப்பாடி பழனிசாமி பின்பற்றாததால் அதிமுக யார் கையில் இருக்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். ஒற்றை முகத்தைக் கொண்டு வாக்கு சேகரிப்பது என்பது தற்போதைக்கு போதும்., ஆனால் கொள்கை பிடிப்புள்ள தலைவர்களை உருவாக்காமல் தவறிவிட்டால் இந்த கேள்வி தமிழக வெற்றி கழகத்திற்கும் பொருந்தும் என்று கூறினார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!