• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மூடர் கூடத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்...” - விடிந்ததுமே விஜய்யை விளாசித் தள்ளிய ஸ்டாலின்...!

    கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பதில் அல்ல, திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 08:42:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Leader MK Stalin slams Cm vijay

    கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்படுவதில் என்ன பெருமை இருக்கிறது? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் மற்றொரு மாபெரும் திட்டமாகப் பெரியார் அறிவுலகம் இன்று மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காக இறுதிமூச்சு வரை போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுவது தனது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

    2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் வகையில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, 6.1.2024 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கோவை மத்திய சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பீட்டில் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்டு, அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த அறிவுக் கோவில்தான் பெரியார் அறிவுலகம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள வசதிகள்:

    பெரியார் அறிவுலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தரைத்தளம்: கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் மின்தூக்கி.

    • முதல் தளம்: வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம்.

    • இரண்டாம் தளம்: குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்த நூல்களைப் படிப்பதற்கான பிரிவு.

    • மூன்றாம் தளம்: போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம்.

    • நான்காம் தளம்: தமிழ் நூல்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவு.

    • ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்கள்: ஆங்கில நூல்கள் பிரிவு மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம்.

    • ஏழாம் தளம்: அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம்.

    பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், உலகத் தரத்திலும் இந்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 1.25 லட்சம் நூல்களைக் கொண்ட மேற்கு மண்டலத்தின் மாபெரும் அறிவுக் களஞ்சியமாக இது திகழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திறக்க முடிவு:

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவைக்குச் சென்றிருந்தபோது, நூலகத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்திருந்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அப்போதே நூலகத்தைத் திறந்து வைக்கலாம் என்று பலரும் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவசரப்படாமல் முழுமையான பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது என்று தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    யார் திறந்து வைக்கிறார்கள் என்பதில் பெருமை இல்லை; எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது என்றும், அந்தப் பெருமை ஆக்க சக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரை:

    பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது அன்புத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சென்னையில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான அழகிய நூலகத்தை உருவாக்கியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கலைஞர் ஆட்சிக்குப் பிறகு, அந்த நூலகத்தை மாற்றியமைக்கவும் சீரழிக்கவும் பல முயற்சிகள் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைத் தடுத்து நிறுத்தி, 2021ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் புதுப்பித்ததாகத் தெரிவித்துள்ளார். இன்றளவும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அந்த நூலகம் சரணாலயமாகத் திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், மேம்பாலங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் எனப் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கிய நவீன சிற்பியான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

    சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்களையும் நூலகங்களையும் திறந்து வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தையும் சிறப்பான முறையில் புதுப்பித்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல்களைப் படிக்கும் பிரிவு மற்றும் நவீன மாநாட்டுக் கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய நூலகங்கள்:

    சென்னை, மதுரையைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்கத் திராவிட மாடல் அரசு முடிவு செய்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் நூலகங்கள் குறித்தும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி: ரூ.290 கோடி மதிப்பில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பிரம்மாண்ட நூலகம்.

    • நெல்லை: ரூ.100 கோடி மதிப்பில் கன்னியாகுமரி சார்ந்த பெயரில் மாபெரும் நூலகம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சேலம்: ரூ.104 கோடி மதிப்பில் பாரதிதாசன் பெயரில் நூலகம்.

    • கடலூர்: ரூ.98.26 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம்.

    தமிழ்நாட்டின் அனைத்துத் திசைகளிலும் பிரம்மாண்ட நூலகங்களை அமைத்து வருவதாகவும், இவை அனைத்தும் விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காண உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சியில் இல்லாத காலத்திலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒவ்வொரு நாளும் மிளிர்வதாகவும், திமுகவைத் தவிர வேறு எந்த அரசும் இவ்வாறு நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்துள்ள இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உருவானவை என்றும், கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை என்றும், வேறு எந்த அரசும் செய்யாதவை என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    பல்வேறு திட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்:

    சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பல்வேறு வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் உள்ளிட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    அந்த அளவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அறிவை மையப்படுத்திய இயக்கம் திமுக:

    அறிவை மையப்படுத்திச் செயல்பட்டு வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கழகத்தின் முதல் தலைமையகத்திற்கு ‘அறிவகம்’ என்று பெயர் சூட்டியதையும், பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

    அறிவு எங்கும் பரவ வேண்டும்; அறிவு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்; வாசிப்புப் பழக்கம் வளர்ந்து, பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கியதாகவும், புத்தகத் திருவிழாக்களை நடத்தியதாகவும், கீழடி, பொருநை உள்ளிட்ட அருங்காட்சியகங்களை அமைத்ததாகவும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ சொற்பொழிவுகளை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இத்தகைய முயற்சிகள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ‘நான் முதல்வன்’ பெயர் மறைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு:

    பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அரங்கில் உள்ள பிரமிட் வடிவிலான கணித மேசையில் பொறிக்கப்பட்டிருந்த ‘நான் முதல்வன்’ என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சராகிவிட்ட பின்னரும் ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டாலே மக்களுக்கு ஸ்டாலின் நினைவுக்கு வந்துவிடுவார் என்று எதிரிகள் அஞ்சுவதாகவும், அதுவே தங்களது வெற்றி என்றும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்பில்லாதவர்களும், அறிவார்ந்த சமூகத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்களும் மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் முடிவுக்கு வந்தே தீரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் திமுக அமைத்த நூலகங்களும் வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ‘பெரியார் அறிவுலகம் கோவையின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும்’:

    இன்று திறக்கப்பட உள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கோவை மக்கள் அனைவரும், திராவிட மாடல் அரசு திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவிற்குத் திரளாகச் செல்வதைப் போலவே பெரியார் அறிவுலகத்திற்கும் செல்ல வேண்டும் என்றும், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோவைக்கு வரும்போது அவர்களையும் அழைத்துச் சென்று இந்த அறிவுலகத்தைப் பெருமையுடன் காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பெரியார் அறிவுலகத்தின் கதவுகள் திறக்கட்டும்; அறியாமை ஒழியட்டும்; வாழ்க பெரியார் என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இஸ்லாம் தழுவியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பா?உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share