தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று தொடங்கியுள்ளது. இந்த முதல் நாளிலேயே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாரம்பரிய தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதி, திமுகவின் வலுவான கோட்டையாக அறியப்படுகிறது. நான்காவது முறையாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கொளத்தூர் தொகுதி திமுகவின் பாரம்பரிய தொகுதியாகவே அறியப்படுகிறது. இன்று பேப்பர் மில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், பிரச்சார வாகனத்தில் மக்களை சந்தித்தார்.

இது திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கட்சிக் கொடிகளை கைகளில் ஏந்தி தமிழ்நாடு வெல்லட்டும் பாடல் ஒலிக்க முதல்வரை சிறப்பாக வரவேற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!
திறந்த வெளி வாகனத்தில் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், கைகளை அசைத்தவாறு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டு பயணித்தார். கொளத்தூர் தொகுதியில் 5 ஆண்டுகால சாதனைகளை புத்தகமாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். செண்டை மேளம் முழங்க, நடனமாடி முதல்வரை கொளத்தூர் தொகுதி திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!