அமலாக்கத்துறை (ED) இந்தியாவின் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு முக்கியமான பொருளாதார குற்ற விசாரணை அமைப்பாகும். இது பணமோசடி தடுப்புச் சட்டம், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்துவதற்கு பொறுப்பேற்கிறது. 1956-இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆரம்பத்தில் அந்நிய செலாவணி மீறல்களை கையாண்டது. பின்னர் 2002-இல் PMLA சட்டம் வந்த பிறகு, அதன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டன. இதன் மூலம் குற்றங்களில் இருந்து வரும் பணத்தை மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உரிமை கிடைத்தது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அமலாக்கத்துறை அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் முக்கியமாக இரு அம்சங்களில் அடங்கியுள்ளன. அரசியல் ரீதியான தவறான பயன்பாடு. மற்றொன்று, கூட்டாட்சி அமைப்பை மீறிய அதிகார அத்துமீறல். முதலில், அரசியல் தலையீடு என்ற குற்றச்சாட்டு. 2014-க்குப் பிறகு அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதில் அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது. உதாரணமாக, 2014 முதல் 2024 வரை அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 95%க்கும் மேல் எதிர்க்கட்சியினருக்கு எதிரானவை என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சகேத் கோகலே போன்றோர் தரவுகளை முன்வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்குவது பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாகத் துறையின் அதிகாரம் தவறானது என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்யப்பட்டது எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சொத்துக்கள் மீது நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிந்து எடுக்க முடியும் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறைக்கு எழுப்பிய உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: FIR-க்கு முன் டிஜிபிக்கு நெஞ்சுவலி... ED சுழலில் சிக்கித் தவிக்கும் திமுக... அடுத்த செந்தில் பாலாஜி இவரா?
மேலும் நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாகத் துறையின் அதிகாரம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது. சொத்துகள் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறையின் சட்ட விதிகளுக்கு எதிரான நிலுவை வழக்குகளையும் இணைத்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கே.என்.நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி...!! - நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு... முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட ED...!