மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நேராக தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தூத்துக்குடி புதிய விமான முனையத்தை திறந்து வைத்த பின்னர் திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்திக்க உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகை புரிந்துள்ளார். இன்று வந்து தூத்துக்குடியில் வந்து முதல் கட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இன்று வந்து இரவு 10 மணி அளவிற்கு திருச்சி விமானநிலையம் புறப்படுகிறார்.
விமான நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வந்து தற்போது இங்கு ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற்ற பின்னர் நாளை காலை மீண்டும் வந்து தங்கும் விடுதியில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல உள்ளார். அங்கு செல்லும் வழியில் வந்து பிரதமர் வந்து மக்களை சந்தித்து ரோட் ஷோ நடத்த இருக்கறதாகவும் தகவலானது வெளியாகி இருக்கிறது. மீண்டும் வந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு நாளை ஹெலிகாப்டர் மூலமாக சென்று அங்கு வந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து டெல்லிக்கு வந்து புறப்பட்டவுள்ளார்.