வருங்கால வைப்பு நிதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதளத்தில் பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தல் பணியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை PF தொடர்பான பல முக்கிய ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
EPFO இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் (System Migration) நடைபெறுவதால், புதிய பி.எப். கோரிக்கைகள், முன்பணக் கோரிக்கைகள், கோரிக்கை செயலாக்கம் உள்ளிட்ட சேவைகள் இந்த காலகட்டத்தில் முழுமையாக நிறுத்தப்படும். உறுப்பினர் போர்ட்டல், முதலாளி போர்ட்டல், UMANG செயலி, e-Passbook, ECR தாக்கல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும்.
EPFO இந்த மாற்றத்தை எதிர்காலத்தில் சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், எளிதாகவும் வழங்குவதற்காக செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மேம்படுத்தல் பணியின்போது உறுப்பினர்கள் சில தற்காலிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே, அவசரமாக PF பணம் தேவைப்படுவோர் அல்லது முக்கியமான ஆவணங்களை கோர வேண்டியவர்கள் இந்த பணிகளை இன்று நள்ளிரவு வரை முடித்துக் கொள்ளுமாறு EPFO கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில உங்களுக்கு 10 லட்சம் ஓட்டு கன்பார்ம்!! இத்தாலி பிரதமர் மெலானிக்கு அவ்வளவு மவுசு! கிண்டல்!

இந்த காலகட்டத்தில் EPFO இணையதளம் வழியாக கோரிக்கைகளை சமர்ப்பிப்பது மற்றும் செயலாக்குவது முழுமையாக முடக்கப்படும். தேவைப்படுவோர் அவசர உதவிக்கு EPFO அழைப்பு மைய எண்ணான 14470ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO அதிகாரிகள் கூறுகையில், “கோரிக்கை செயலாக்க அமைப்பை மேம்படுத்தி, தரவுத்தள ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உறுப்பினர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே இந்த மேம்படுத்தலின் நோக்கம்” என்றனர். இந்த மாற்றத்துக்குப் பிறகு PF சேவைகள் மிகவும் வேகமாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பல லட்சம் ஊழியர்கள் PF தொடர்பான பணிகளை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த 3 நாட்கள் நிறுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். சேவை மேம்பாட்டுக்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை நீண்டகாலத்தில் பயனுள்ளதாக அமையும் என்றாலும், உடனடி தேவை உள்ளவர்கள் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!