புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு புதிய வடக்கு மாவட்ட செயலாளராக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பழனிவேல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்தான் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் சென்றபோது சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக அலுவலகம் கடந்த 15 தினங்களுக்கு மேலாக மூடப்பட்டு எந்த தரப்பையும் உள்ளே அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தான் அதிமுக அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறி புதிய மாவட்ட செயலாளரான பழனிவேல் மாவட்ட எஸ்பி அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தார்.
இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!
இந்நிலையில் தான் நேற்று புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற நிலையில் சி.விஜயபாஸ்கர் தரப்பைச் சேர்ந்த யாரும் பங்கேற்காத நிலையில் அவர் தரப்பில் இருந்து ஒரு வழக்கறிஞர் மட்டுமே பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இருதரப்பையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாக கூட்டம் போட்டு சாவியை புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பது என்று முடிவு எடுத்து கட்சி அலுவலக சாவியை ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு அதிமுகவின் புதிய வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் அவரது ஆதரவாளர்களுடன் செல்ல உள்ளார்.
இதையும் படிங்க: எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!